மழைநீர் வடிகால் அமைக்க நிதியுதவி வழங்கிய நகராட்சி தலைவர்
குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி தலைவர் நிதியுதவி வழங்கினார்;
குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நிதியுதவி வழங்கினார்
குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி தலைவர் நிதியுதவி வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி 31வது வார்டு, நேதாஜி நகர், ராகவேந்திரா கல்லூரி பின்புறம் மழை நீர் வடிகால் வசதி அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி அப்பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க நகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. அப்பணியை நமக்கு நாமே திட்டத்தில் (2022-2023) மேற்கொள்ள, மொத்த மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியான ரூபாய் ஏழு லட்சத்தை தனது பங்களிப்பாக, நம் நாடு அறக்கட்டளை சார்பில் அதன் கவுரவ தலைவரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் வழங்குவதாக தெரிவித்திருந்தார். இதன்படி முதல் தவணையாக
3 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு ராஜேந்திரன் வசம் வழங்கினார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ் ,ரேவதி, நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, கதிரேசன், அண்ணமார் கந்தசாமி, விக்னேஷ், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.