குமாரபாளையத்தில் இலவச யோகா பயிற்சி முகாம்
குமாரபாளையத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை 10 நாட்கள் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது;
ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
குமாரபாளையத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை 10 நாட்கள் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
குமாரபாளையம் சரஸ்வதி தியேட்டர் ரோடு, குரு வணிக வளாகத்தில் உள்ள உலக சமாதான ஆலயத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை, 10 நாட்கள் இலவச யோகா பயிற்சிகள் காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரையிலும், மாலை 06:00 மணி முதல் 07:00 மணி வரையிலும் நடைபெறுகின்றன பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென யோகா ஞானாசிரியர் சாந்திபெருமாள்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். யோகா ஆசிரியர்கள் ரவிசந்திரன், நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஆசிய அளவிலான யோகாசன போட்டிக்கு குமாரபாளையம் யோகாசன மாணவி தேர்வு
ஆசிய அளவிலான யோகாசன போட்டி வருகிற ஜூன் 23,24,25 மூன்று நாட்கள் வியட்நாம் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேரில், குமாரபாளையம் அரவிந்த் யோகனசன மையத்தை சேர்ந்த மதுமிதா ஒருவராவார். மதுமிதாவை மாநில விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இவர் வியட்நாமில் நடைபெறும் யோகா போட்டியில் 6 வகையான யோகாசன பிரிவுகளில் பங்கேற்கவுள்ளார். இதுவரை 4 வகையான யோகாசன பிரிவுகளில்தான் மற்றவர்கள் பங்கேற்றுள்ளனர் என கூறப்படுகிறது. மதுமிதாவை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.