அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்!

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.;

Update: 2023-11-08 15:00 GMT

படவிளக்கம் :குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை, ரத்த வகை கண்டறிதல், ரத்த கொதிப்பு, உள்ளிட்ட சிகிச்சைகள் முகாம் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. சேலம் கே.எம்.ஆர்.டி. பொதுநல சேவை மையம், ஈரோடு அகர்வால் கண் மருத்துவம னை ஆகியோர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். இதில் கலைமகள் வீதி, ராஜா வீதி, புத்தர் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரிய பெருமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி பரிசுகள் வழங்கினர். விடியல் பிரகாஷ், தீனா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News