குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: நகராட்சி சேர்மன் பங்கேற்பு
குமாரபாளையத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.;
குமாரபாளையத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 12வது வார்டு பகுதியில் கவுன்சிலர் அழகேசன், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முகாமினை துவக்கி வைத்தார்.
இதில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், கதிரேசன், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.