குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கராத்தே சீருடை
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கராத்தே சீருடை வழங்கப்பட்டது.;
சென்னை நேதாஜி நவ பாரத் பவுண்டேசன் சார்பில் கராத்தே பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே சீருடைகள் வழங்கும் விழா குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே மையத்தில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே சீருடை வழங்கும் விழா, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பயிற்சி ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
சென்னை நேதாஜி நவ பாரத் பவுண்டேசன் சார்பில், தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடேஷ் பங்கேற்று, கராத்தே சீருடைகளை 75 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.
தலைவர் மகேஷ் பேசுகையில், மாணவ, மாணவியர்கள் பள்ளிபடிப்புடன், தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது மகிழ்ச்சி. இது ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பானது. பள்ளிப்படிப்பிலும் அதிக கவனம் கொண்டு நன்கு படித்து, பெற்றோர்களை மதித்து வாழ்வில் முன்னேற வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் போல் வீரத்துடன் திகழ வேண்டும்.