அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா
குமாரபாளையம் அருகே அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன;
குமாரபாளையம் அருகே அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் சௌந்திரம் தலைமையில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் முருகவேல் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் பள்ளியின் பி.டி.ஏ. துணை செயலாளருமான நாச்சிமுத்து பங்கேற்று, 40 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பி.டி.ஏ. துணை தலைவர் புலவர் பெரியசாமி, பொருளாளர் துரைசாமி மற்றும் ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர். இதே போல் குள்ளநாயக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கபட்டது இதில் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.85.44 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக நான்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு, நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன் தலைமை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் .மதுரா செந்தில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் .ராஜாராம், உள்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:பேச்சுத்திறமை என்பது நாளடைவில் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க தி.மு.க. சார்பில் பேச்சு பயிற்சி முகாம் பிரதி சனிக்கிழமை மாலை 06:00 மணியளவில் கட்சி அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. நகர தி.மு.க. செயலர் செல்வம், ஞானசேகரன், பேச்சாளர் அன்பழகன் பயிற்சியினை துவக்கி வைத்தனர்.
தி.மு.க. மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியிலும் இருந்த முன்னாள் தலைவர்கள், பேச்சாளர்கள் இரவு பகலாக பேசித்தான் மத்திய, மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர். அண்ணா,கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, உள்ளிட்ட தலைவர்கள் இரவு, பகலாக தேர்தல் பிரசாரங்கள் செய்வார்கள்.இவர்களின் பேச்சை கேட்க பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ஒவ்வொரு கட்சி சார்பில் தலைமைக்கழக பேச்சாளர்கள் என நியமனம் செய்யப்பட்டனர்.
மூத்த அரசியல்வாதிகள் மேடையில் பேசும் முன்பாக, தலைமைக்கழக பேச்சாளர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சி உருவான விதம், கட்சி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் செய்த தியாகங்கள், ஆகியவற்றை பொதுமக்களிடம் எடுத்துரைப்பார். தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விட்டது. மொபைல் போனில் குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதை தவிர்க்க இளைஞர்கள் பேச்சாற்றல் பெற வேண்டும் என்பதற்காக பேச்சு பயிற்சி மிகவும் அவசியமாகிறது. மாணவர்களும் பேச்சு பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.