குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாட்டம்!
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகனின் 102 வது பிறந்தநாள் விழா குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில், கட்சி அலுவலகத்தில்வடக்கு நகர தி.மு.க செயலாளர், நகராட்சி தலைவர்விஜய்கண்ணன் தலைமை வகித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். அன்பழகன் சாதனை குறித்து நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். இதில் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்களும், நகர மன்ற உறுப்பினர்களும், முன்னாள், இந்நாள் மாவட்ட கழக, நகர கழக நிர்வாகிகளும், மகளிர் அணியினரும் பங்கேற்றனர்.
அன்பழகன் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
அன்பழகன் தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார்.இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.[2] 2001-2006ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.2020 மார்ச் 7 ஆம் நாள், தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார்.[3][4] தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.[.அன்பழகன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், கல்யாணசுந்தரனார், சுவர்ணம்பாள் தம்பதியருக்கு, 1922 திசம்பர் 19 இல் பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா ஆகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்தார். படிப்பை முடித்தபின், 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.[5]
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1962 ஆம் ஆண்டில், சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இந்திய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல், சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1983 ஆக. 10ஆம் நாள் ஈழத்தமிழரின் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில அரசும் போதிய கவனஞ்செலுத்தாதைக் கண்டித்து தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இவரும் அன்றைய தி.மு.க.தலைவர் .கருணாநிதியும் துறந்தனர். தி.மு.க.வின் மூத்த மேடைப் பேச்சாளராக விளங்கினார். ஈ.வெ.ரா. அடியொற்றி நடந்தார். இவர், 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.