முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊதிய உயர்வு அறிவித்த சேர்மன்
குமாரபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அம்மா உணவக பணியாளர்களுக்கு சேர்மன் ஊதிய உயர்வு அறிவித்தார்.;
சேர்மன் விஜய்கண்ணன், திமுக தலைமை சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் சைக்கிள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சேலம் சாலை சஷ்டி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்கபட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். உலக சைக்கிள் தினத்தையொட்டி அறிவொளி இயக்கம், இல்லம் தேடி கல்வி இயக்கம் பணிகள் செய்து வரும் தாமரைக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. மனோன்மணி என்ற பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் காலை மற்றும் மாலை உணவு வழங்கப்பட்டது. பல வார்டுகளில் கட்சிக்கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அம்மா உணவக பணியாளர்கள் தங்கள் ஊதியம் குறைவாக உள்ளதாக கூறியதால், கருணாநிதி பிறந்தநாள் முதல் 50 ரூபாய் ஊதிய உயர்வினை சேர்மன் விஜய்கண்ணன் வழங்கினார். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜூல்பிகர் அலி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், தர்மராஜ், சியாமளா, தீபா, கனகலட்சுமி, விஜயா, ரேவதி, சுமதி, நந்தினிதேவி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.