நகை திருடிய குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை
குமாரபாளையத்தில் 6 பவுன் நகை திருடிய வழக்கில் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது;
பைல்
குமாரபாளையத்தில் 6 பவுன் நகை திருடி சென்றவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசிப்பவர் ராதாசாந்தி. 2013, மே 18ல் இவரது வீட்டிற்கு மின்வாரிய ஊழியர் என்று கூறி வந்த நபர், மின் மீட்டர் பழுதாக உள்ளதாகவும், அதன் மீது தங்க சங்கிலி வைத்தால் சரியாகும் என்று, கூறியுள்ளார். இதனை நம்பி ராதா சாந்தி தன் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.
அதனை பெற்றுக்கொண்ட அந்த நபர், பெரிய அளவிலான ஒயர் வேண்டும், அதனை மின்வாரிய அலுவலகம் சென்று எடுத்து வருகிறேன், என்று கூறி, நகையுடன் மாயமானார். இது குறித்து அப்போது பணியில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, வழக்குப்பதிவு செய்து, நகை திருடி சென்ற நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் மதுரை மாவட்டம, பறவை பகுதியயை சேர்ந்த பாலசுப்ரமணி என்பது தெரியவந்தது. 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலசுப்ரமணிக்கு ஓராண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் விதித்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.