வெப்படை தீயணைப்பு படையினரின் தற்காப்பு பயிற்சி முகாம்
குமாரபாளையம் அருகே வெப்படை தீயணைப்பு படையினரின் சார்பில் தற்காப்பு செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே வெப்படை தீயணைப்பு படையினரின் சார்பில் தற்காப்பு செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் பெரியார் நகர் காவிரி கரையோர பகுதியில் வெப்படை தீயணைப்பு படையினரின் சார்பில் தற்காப்பு செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆற்றில் அடித்து செல்லப்படும் நபரை காப்பாற்றுதல், கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. நிலைய அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.