தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க முகாம்

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.;

Update: 2023-09-14 17:00 GMT

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் நடந்தது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மில் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தீ பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி களில் தீயை அணைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தடுப்பு பற்றிய செயல் விளக்கங்களை  அளித்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் பணிக்கு பாராட்டு வார்த்தைகள் பொருந்தாது என்றனர்.


Tags:    

Similar News