குமாரபாளையம் அருகே பவானியில் பிரியாணி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது

குமாரபாளையம் அருகே பவானியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-09-04 13:13 GMT

சிக்கன் பிரியாணி மாதிரி படம்.


பவானி :

பவானி-மேட்டுர் ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கோழி பிரியாணி கடை திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விலையில் பிரியாணி, கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்கிச்  செல்ல கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கொரோனா விதிகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூடினர். கடைகளுக்குள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானி தாசில்தார் முத்து கிருஷ்ணன்,தேர்தல் துணை தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் விதி மீறி செயல்பட்ட கடைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து விதி மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Tags:    

Similar News