எடப்பாடியார் கை காட்டுபவர்தான் பிரதமராக முடியும் - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.;
எடப்பாடியார் கை காட்டுபவர்தான் பிரதமராக முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
இவர் பேசியதாவது:
கழக பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது..
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் 90 சதவீதம் முடிவு பெற்று விட்டன. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை.தமிழகம் முழுவதும் பூத்கமிட்டி பணிகளுக்கு செல்லும் போது அனைவரின் எதிர்பார்ப்பு எப்போது அ.தி.மு.க ஆட்சி வரும்? எடப்பாடியார் ஆட்சி வரும்? என்பதுதான்.
அந்த அளவுக்கு இரண்டரை ஆண்டு கால தி.மு.க ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மின்கட்டன உயர்வு ,குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுதான் உள்ளது. அனைத்தும் தொழில்களும் இந்த ஆட்சியில் முடங்கி விட்டன. கேட்டால் இலவச பேருந்து கொடுத்துவிட்டதாக கூறி அதிலும் பல்வேறு பிரச்சினைகள் தான் இந்த ஆட்சியில் உள்ளது. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி ஒரு பகுதி பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு தராமல் இருந்து வருகிறது இந்த விடியா அரசு..
மாதம் மாதம் 1000 ரூபாய் கொடுத்து, அதனை வரி உயர்வு செய்து, கூடுதலாக செலவு செய்யும் அளவுக்கு திரும்ப பெற்று கொள்கிறது இந்த விடியா அரசு. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். கழக பொதுச்செயலாளர் கைகாட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமராக முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.