குமாரபாளையத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய வருவாய்த்துறையினர்
குமாரபாளையம் அருகே வருவாய்த்துறையினர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.;
குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர், அங்குள்ள ஓடைப்பகுதியில் காம்பவுண்ட் சுவர் அமைத்திருந்தனர்.இதுபற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று பொக்லின் மூலம் காம்பவுண்ட் சுவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மில் நிர்வாகத்தினர், அவர்களாக முன்வந்து அந்த சுவற்றை அவர்கள் அகற்றினர். இதில் உதவி தாசில்தார் ரவி, வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.