மின் சாதன பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளர்கள்

குமாரபாளையத்தில் மின் சாதன பராமரிப்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்;

Update: 2023-06-17 15:00 GMT

குமாரபாளையத்தில் மின் சாதன பராமரிப்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்

குமாரபாளையத்தில் மின் சாதன பராமரிப்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்

பிரதி அமாவாசை அல்லது குறிப்பிட்ட ஒரு நாளில் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மின் சாதனங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை என்று அறிக்கையில் நேரம் குறிப்பிட்டாலும், வழக்கமாக இரவு 07:00 மணிக்கு மேல்தான் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள்.

இது தவிர இதர நாட்களிலும் கடும் வெயில் வாட்டி வரும் வேளையில் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த மின் நிறுத்த நாளில் சேதமான மின் கம்பிகள் மாற்றுதல், மின் மாற்றிகளில் ஆயில் மாற்றுதல், பழுதான மின் விளக்குகள் மாற்றுதல், சேதமான மின் கம்பங்கள் மாற்றப்பட்டு, புதிய கம்பங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குமாரபாளையம் நகரில் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால், மின்வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் மின் சாதன பொருட்கள் பழுது நீக்கி, சேதமான பொருட்கள் மாற்றம் செய்யப்பட்டன.



Tags:    

Similar News