பள்ளிபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கல்
பள்ளிபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளிபாளையம் நகராட்சி 15-வது நிதிக்குழு 2022-2023 திட்டத்தில், 12 மின்கலம் மூலம் இயங்கும் 24 வாகனங்கள், 24.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் சேர்மன் செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகன், ஆணையாளர் தாமரை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதிக்கு நமக்கு நாமே திட்டத்தில் புதிய நியாய விலை கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த இடத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்வ விஜயராணி மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பார்வையிட்டனர்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனையும் நேரில் பார்வையிட்டு சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நகர பொறுப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், வேல்முருகன், பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.