புதிய தொழில் நுட்பத்தில் மீன்வளர்ப்பு : சுயேச்சை வேட்பாளர் உறுதி

மீன் வளர்ப்புக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று சுயேச்சை வேட்பாளர்உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-22 12:32 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் ஜே.கே.கே.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா வைரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

 நேற்று, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது அவர் 'குமாரபாளையம் காவேரி நகர் முதல் எஸ்.எஸ்.எம் காவிரி பாலம் வரையிலும், பள்ளிப்பாளையத்தில், சமயசங்கிலி முதல் ஓடப்பள்ளி வரையிலும் மீன் வளர்ப்பு தொழில் செய்ய புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த தொழில் வளர்ச்சியடைய முயற்சிகள் மேற்கொள்வேன்.

அதே போல பூங்காவுடன் கூடிய படித்துறையும் அமைத்துக் கொடுக்கப்படும்.' என்று வாக்குறுதி அளித்தார்.மேலும் அவர் பேசுகையில், 'தேர்தல் ஆணையம் எனக்கு வைரம் சின்னம் ஒதுக்கியுள்ளது. குமாரபாளையம் தொகுதி மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வைரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி என்னை பெறச்செய்யுங்கள்.' என்று கேட்டுக்கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் திரளாக சென்றிருந்தனர்.

Tags:    

Similar News