குமாரபாளையம் அருகே அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் அருகே அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வீராட்சிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாமக்கல் மாவட்டத்திற்க்குட்பட்ட குமாரபாளையம். திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்களுக்கானஅதிமுகவின் தகவல்தொழில் நுட்ப அணியினருக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இணைய தளங்களில் எவ்வாறு செயல்படுவது? என அதிமுக வின் பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி. பழனிச்சாமி தலைமையிலான பயிற்சி பாசறை மற்றும் ஆலோசனை கூட்டம் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர் ராஜ்சத்யன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள். தங்மணி, ராமலிங்கம்,.சரோஜா. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள். தென்னரசு. சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அதிமுக பொதுசெயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தொண்டையில் புண் ஏற்பட்டுள்ளது. அதிகமாக பேச என்னால் இயலாது. இந்த கூட்டத்தின் நோக்கமே எதிரிகளை கூண்டோடு ஒழிக்கவே நான் தகவல் தொழில் நுட்ப அணி கூட்டத்திற்காக கலந்து கொள்ளும் முதல் நிழ்ச்சி. சேலம் மாவட்டத்தில் கூட நான் கலந்து கொள்ளவில்லை. இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றதால் கட்டாயத்தில் கலந்துகொள்கிறேன்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்ந்து 4 முறை சட்டமன்ற பேரவை உறுப்பினராக உள்ளார். நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் இரும்பு கோட்டை என்பதை நிருபித்து வருகிறார். அவர் சட்டமன்றத்திற்க்கு வரும். பொழுதெல்லாம் ஏதாவதொரு கோரிக்கை கொண்டு வந்து பல்வேறு பணி செய்துள்ளார். .450 கோடியில் நாமக்கல்கூட்டுக்குடிநீர் திட்டம், திருச்செங்கோடு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய், காவிரி ஆற்றின் குறுக்கே மோகனூர் கரூர் பகுதி 400 கோடி செலவிலும் தடுப்பணை நாமக்கல் தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சட்ட கல்லூரி அமைத்ததும் அதிமுக ஆட்சி. குமாரபாளையத்தில் ஏழை எளியோர் பயில கலை அறிவியல் கல்லூரி நாமக்கல் மாவட்டத்தில் ஆவின் பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நாமக்கல் புறவழிச்சாலை,. அதிமுக ஆட்சியில் புதிய புதிய திட்டங்கள் கொண்டுவர காரணமாக இருந்தவர் தங்கமணி.
ஊடகம் பத்திரிக்கைகள் இந்த ஆட்சிக்கு சாதகமாக உள்ளன. எனவே இவற்றை முறியடிக்க இந்த இளைஞர் பட்டாளம் காத்திருக்கிறது. விஞ்ஞான உலகத்திலே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அண்றாடம் திராவிடம் ஆட்சி என்று சொல்லி கொண்டிருக்க கூடிய ஆட்சியினை இணையதளம் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.
பூத் கமிட்டியிலேயே இரண்டு நபர்கள் தகவல் தொழில்நுட்ப அணியினர் கொண்ட கட்சி நம்முடையது. பல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நமது கட்சி தகவல் கொண்டு போய் சேர்ப்பதில்லை. இந்த வலைதள பணி சிறப்பான பணி.
பணத்தை கொட்டி வாக்குகளை பெற்று விடலாம் என்ற நினைப்பை தகர்க்க இணைய தள பொறுப்பாளர்களிட்ம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதிமுக ஒன்றுதான் ஜனநாயக கட்சி. ஸ்டாலின் புற வழியாக முதல்வராக வந்துள்ளார். இவருக்கு அடுத்து அவரது மகன் தற்பொழுது அமைச்சர். இந்தியாவிலேயே நடக்காதது அதிமுகவில் நடக்கும்.
கிளைச்செயலாளர் முதலமைச்சாராக்க முடியும். வீட்டின் கதவை தட்டி பதவி கொடுக்கும் கட்சி அதிமுக. பொதுமக்கள் அதிமுகவை பற்றி யோசிக்கிறார்கள். மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக. நாடாளுமன்ற தேர்தல் இந்த மாதம் இறுதி இல்லது அடுத்த மாதம் முதல்வாரத்தில் அறிவிக்கப்படும். அதிமுக சார்பில் நிற்க வைக்கப்படும் வேட்பாளர் வெற்றி பெற்று சென்றால் தமிழக மக்களுக்காக குரல்கொடுப்பார். நமது உரிமையினை பாதுகாக்க துணிந்துவிட்டோம்.
திமுக தேசிய அளவில் கூட்டணி அமைக்க இந்தியா கூட்டணி அமைத்தனர். ஆனால் அனைவரும் கலைந்துவிட்டனர். ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது கலைந்நு செல்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள் அதிமுகவின் கூட்டணி.
தொழில் முனைவோர் மாநாடு கடந்த இரண்டு வருடங்களுக்கு நடத்தினீர்களே? எவ்வளவு தொகை பெற்றீர்கள்? என கேள்வி எழுப்பினேன். பதிலில்லை. தமிழக முதல்வர் ஸ்பெயினில. 11 நாள் தங்கிருந்து தொழில்.முனைவோரிடம் ஒப்பந்தம் போடுகிறார். .தூத்துக்குடி,. சென்னை, திருச்சி மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கின்றனர். இங்கேயே தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடாமல் ஸ்பெயினுக்கு சென்னை ஒப்பந்தம் செய்வது மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்ததில் சம்பாரித்த பணத்தை முதலீடு செய்வதற்க்கா வெளிநாடு சென்றுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.