குமாரபாளையம் ரேஷன் கடைகளில் ரேகை பதிவு செய்ய முதியோர்கள் அலைக்கழிப்பு
குமாரபாளையம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேகை பதிவு செய்ய வயதானவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.;
குமாரபாளையம் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க ரேகையை பதிவு செய்யும் முதாட்டி.
குமாரபாளையம் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற குடும்பத்த்தில் யாராவது ஒருவர் ரேகை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டது. ஒரு சில வீடுகளில் கணவன், மனைவி என வயதானவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். தள்ளாடியபடி இவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதே பெரிது.
இதில் இவர்களின் ரேகை பதியவில்லை என்றும், தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியிடம் கடிதம் பெற்று வரக் கூறியும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இவர்கள் தாலுகா அலுவலகம் சென்றாலும் சரியான அணுகுமுறை இல்லாததால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது பற்றி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து வயதானவர்கள் எளிதில் ரேஷன் பொருட்களை பெற்றிட உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.