குமாரபாளையத்தில் குடிநீரில் சாய நீர் கலப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
குமாரபாளையத்தில் குடிநீரில் சாய நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குமாரபாளையத்தில் கம்பன் நகர், தம்மண்ணன் நகர், உடையார்பேட்டை, மேற்கு காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் சாய நீர் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதே போல் அடிக்கடி சாய நீர் கலந்து வருகிறது. பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.