மேம்பால பணிகளால் சர்வீஸ் சாலையில் அதிகரிக்கும் கடைகள்!
குமாரபாளையம் அருகே மேம்பால பணிகளால் சர்வீஸ் சாலையில் கடைகள் அதிகரித்து வருகிறது.;
குமாரபாளையம் அருகே மேம்பால பணிகளால் சர்வீஸ் சாலையில் அதிகரிக்கும் கடைகள் அதிகரித்து வருகிறது.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக
கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில்தான் சாலையை கடந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.
இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், பல ஆண்டுகளுக்கு பின் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால், சர்வீஸ் சாலையில் டீ கடை, டிபன் கடை, கருப்பு சாறு கடை, சில்லி சிக்கன் கடை என்பது உள்ளிட்ட பல்வேறு கடைகள் உருவாகி வருகிறது. சர்வீஸ் சாலையோரம் வெறுமனே இருந்த இடத்தில் தற்போது பொக்லின் மூலம் மண் கொட்டப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.