குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறை சார்பில் குமாரபாளையத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது;

Update: 2023-06-26 15:00 GMT

திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறை சார்பில் குமாரபாளையத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறை சார்பில் குமாரபாளையத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறை சார்பில் நடந்த சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை எஸ்.ஐ.க்கள் செந்தில்குமார் மற்றும் ராஜா துவக்கி வைத்தனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை, சேலம் முதன்மைசாலை, காவேரிநகர், எருமைகட்டுதுறை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்தது.

அப்போது பள்ளி மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி போதையை ஒழிப்போம் என்று கோஷமிட்டபடி வந்தனர். பொதுமக்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Tags:    

Similar News