குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ. ஆய்வு

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை டி.ஆர்.ஓ. மற்றும் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தனர்.

Update: 2022-07-17 14:00 GMT

குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 27 குடும்பங்களை சேர்ந்த 59 நபர்களும், புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளியில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் இவர்களை நேரில் ஆறுதல் கூறியதுடன், வெல்ல பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறித்தினார்.

திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு மையங்களுக்கு செல்லாத காவிரி கரையோரப்பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது தாசில்தார் தமிழரசி, டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

போலீசார், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News