குமாரபாளையத்தில் 50 பெண் குழந்தைக்கு சிறுசேமிப்பு கணக்கு துவங்கிய தி.மு.க.வினர்

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது.;

Update: 2021-11-15 12:45 GMT

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு கணக்கு துவங்க  குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

குமாரபாளையம் அஞ்சல் அலுவலகத்தில் 50 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.250 வீதம் சிறுசேமிப்பு கணக்கு துவங்கும் நிகழ்வு  நகர பொறுப்பு குழு தலைவர் மாணிக்கம், நகர பொறுப்பு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகி விஜைகண்ணன் தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சேமிப்பு கணக்கு தொடங்கியமைக்கு பாஸ்புக் வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் ஆனந்தன், செந்தில்குமார், சரவணன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜுல்பிகார் அலி, மாவட்ட தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், 23வது வார்டு செயலர் ஆறுமுகம், 17வது வார்டு கனகராஜ், 10வது வார்டு பிரதிநிதி பிரகாஷ், 2வது வார்டு நாகராஜ், அழகேசன், வேலுமணி, 5வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், 10வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார், 14வது வார்டு இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், ஹரி பாலாஜி, விவேக், அருண், தில்லை நிதி, முரசொலி பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News