ஜல்லிக்கட்டு இடத்தை பார்வையிட்டு, நீர் மோர் பந்தல் திறந்து வைத்த தி.மு.க. மாவட்ட செயலர்

குமாரபாளையம் அருகே ஏப். 16ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி, போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட தி.மு.க. செயலர் நேரில் பார்வையிட்டார்.;

Update: 2023-04-09 00:32 GMT

குமாரபாளையம் அருகே ஏப். 16ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி, போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஏப். 16ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி, போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் ஏப். 16ல் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி மைதான வேலைகளையும், மேடை, கேலரி, வாடிவாசல், மாடுகள் வழிப்பாதைகளை தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் பார்வையிட்டார். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் வரவேற்றார்.

இதையடுத்து குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தி.மு.க சார்பில், நகர செயலர் செல்வம் தலைமையில் நீர் மோர் பந்தலை மதுரா செந்தில் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ், நகர்மன்ற தலைவர் விஜய கண்ணன், மாவட்ட பொருளாளர் ராஜாராம், நகர மன்றதுணை தலைவர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன்சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News