நீட் தேர்வு விலக்கு வேண்டி கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வு விலக்கு வேண்டி தி.மு.க. சார்பில் குமாரபாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.;
குமாரபாளையத்தில் நீட் தேர்வு விலக்கு வேண்டி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
நீட் விலக்கு நம் இலக்கு எனும் வாசகத்தின் படி தி.மு.க. சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் இரண்டாவது வார்டு பகுதியில், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. வருங்கால மாணவ, மாணவியர் இதற்கு அதரவு தர வேண்டும் என பிரசாரம் செய்ததால், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் இதில் கையொப்பமிட்டனர். நீட் தேர்வு இல்ல தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் கூட்டம் 1வது வார்டு செயலாளர் ராமசாமி தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் மற்றும் நகர வடக்கு தி.மு.க. செயலர் விஜய்கண்ணன் பங்கேற்று, பாக முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கி பேசியதாவது; வருகிற 4,5,18,19 தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்க்கை முகாமில் வார்டு செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி புதிய வாக்காளர்கள் சேர்க்கவும், இடம்பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கம் மற்றும் வாக்காளர்களின் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் குமாரபாளையம் நகரத்தில் கழகத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை பூர்த்தி செய்து கொடுத்து அதன் மூலம் கழகத்திற்கும் கழகத் தலைவருக்கும் மக்கள் ஆதரவு கிடைக்க பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.