குமாரபாளையத்தில் திமுகவினர் திண்ணை பிரச்சாரம்
குமாரபாளையத்தில் ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தி.மு.க.வினர் திண்ணை பிரச்சாரம் செய்தனர்.;
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு நகரம் 16வது வார்டு தி.மு.க சார்பில் ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தி.மு.க.வினர் திண்ணை பிரச்சாரம் மூத்த நிர்வாகி எல்லப்பன் தலைமையில் நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசுகையில், முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரத்தின் மூலம் எடுத்துரைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற செய்ய அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின் நடந்த பொது உறுப்பினர் கூட்டத்தில், 16வது வார்டு பொறுப்பாளராக ராஜ்குமாரை நியமனம் செய்யவும் மற்றும் பொறுப்புக் குழு அமைக்கவும், மாவட்ட கழகத்திற்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், ராஜ்குமார், கந்தசாமி மற்றும் வெங்கடேசன் 16 வது வார்டு கழக உறுப்பினர்கள் மகளிர் அணியினர் ஆகியோர் உட்பட கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள் கேட்கும் குழுவினரிடம் குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள், பவர்லூம் உரிமையாளர்கள், சாயப்பட்டறை, விடியல் ஆரம்பம் மற்றும் கல்விக்கடன் பெற்றவர்கள் பங்கேற்று மனு கொடுத்தனர்.
தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள் கேட்கும் பணிக்காக, தேர்தல் அறிக்கை குழுவினர் எம்.பி. கனிமொழி தலைமையில் சேலம் வந்தனர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க.செயலர் ஞானசேகரன் தலைமையில், குமாரபாளையம் டையிங் உரிமையாளர்கள் சங்கம், குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், குமாரபாளையம் பவர்லும் சங்கம் சார்பில், தேர்தல் அறிக்கை குழுவினர் வசம் மனு கொடுக்கப்பட்டது.
இதில், சாயப்பட்டறை தொழில் சிறந்து நடந்திட பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், அதிக அளவில் பருத்தி ஏற்றுமதி செய்வதால், நூல் விலை அடிக்கடி அதிகரிக்கிறது, இதனால் ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்பதால், இதனை தவிர்க்க பருத்தி ஏற்றுமதியை தவிர்க்க வேண்டும், ஜவுளிகளுக்கான ஆர்டர்கள் பங்களாதேஷ், சீனாவிற்கு செல்கிறது, இந்தியாவிற்கு கிடைப்பது இல்லை, இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு ஆர்டர்கள் கிடைக்காததால், ஜவுளி ஏற்றுமதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
விடியல் ஆரம்பம் சார்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் எனவும், பொதுநல ஆர்வலர்கள், கல்விக்கடன் பெற்றவர்கள் சார்பில் ஆறுமுகம், பஞ்சாலை சண்முகம் தலைமையில் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டி, மனு கொடுக்கப்பட்டது.