கருத்து வேறுபாட்டால் பிரிந்த மாணவர் தாய் பாசத்தால் வீடு திரும்பினார்
குமாரபாளையத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த அரசு பள்ளி மாணவன் தாய் பாசத்தால் வீடு திரும்பினார்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரகாந்த், (வயது17.) இவர் குள்ளநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவனின் குடும்பத்தார் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவன் வீடு திரும்பியதாக தகவல் கிடைத்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறும்போது
வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, சேலத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றியுள்ளார். தனது வீட்டின் அருகில் உள்ள தன் நண்பனுக்கு போன் செய்து, அம்மா எப்படி இருக்கிறார்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர், உன் நினைவால் சாப்பிடமால் அழுதபடி உள்ளார், என கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட மாணவன் தாய் பாசத்தால் மீண்டும் நேற்று இரவு 08:00 மணியளவில் வீடு திரும்பினார் என்றார்.