குமார பாளையம் மார்க்கெட் அருகே ரவுடி என கூறி தகராறு செய்தவர் கைது
குமாரபாளையம் மார்க்கெட் அருகே ரவுடி என கூறி தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
குமாரபாளையம் இடைப்பாடி சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் அருகே ஒரு நபர் போவோர், வருவோரிடம் தான் ஒரு மார்க்கெட் ரவுடி என்று கூறி மிரட்டி வந்துள்ளார். மேலும் அவ்வழியே சென்ற அரசு பஸ்களை சேதப்படுத்தவும் முயன்றதாக புகார் வந்தது. நேரில் சென்ற குமாரபாளையம் போலீசார் குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது31,) என்பவரை பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து கைது செய்தனர்.