பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
பல்வேறு கோரிக்கைகள் வலிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதென மாற்றுத் திறனாளிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது;
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென சேந்தமங்கலத்தில் நடை பெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சேந்தமங்கலம் தாலுகா குழு அமைப்பு மாநாடு 24 .12.. 2023 ஞாயிற்றுக்கிழமை காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுத்து சிவா தலைமை வகித்தார். சங்க மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தொடக்கி வைத்து பேசினார்.
மாநாட்டை வாழ்த்தி மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ரங்கசாமி, இந்திய மாணவர் சங்கம் முன்னாள் மாநில தலைவர் கண்ணன் பேசினர்.சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் சேந்தமங்கலம் தாலுகா குழு கௌரவத் தலைவராக சிவா, தலைவராக ரமேஷ், செயலாளராக முருகேசன், பொருளாளராக ரமேஷ், உதவி தலைவர்களாக ஆறுமுகம், சேதுபதி, உதவி செயலாளர்களாக சிவசங்கர், ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலையை முழுமையாக தொடர்ச்சியாக வழங்க வேண்டும், கடுமையான வேலைகள் கொடுக்கக் கூடாது, சம்பளம் முறையாக வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாத மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும், நிலம் இருப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும், நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளி நல அலுவலர் உடனடியாக நிரந்தரமாக நியமிக்க வேண்டும்,
மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குறைதீர்ப்பு கூட்டங்கள் முறையாக நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக சுயதொழில் செய்ய அனைத்து வங்கிகளிலும் கடன் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை புதுப்பிக்க சென்றால் சதவீதம் குறைத்து போடுவது கூடாது, மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளை தீர்ப்பதற்கான நீதிபதி மற்றும் வழக்கறிஞர் யார்? தொடர்பு நம்பருடன் பெயர் பலகை வைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைகளை அந்தியோதயா அண்ணா யோஜனா கார்டுகளாக மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2024 ஜனவரி 30 ஆம் தேதி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.