பள்ளிபாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்; கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திப்பாளையத்தில், எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேருந்து நிறுத்தப்பகுதியில் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.25000 ஊரடங்கு கால உதவி தொகை வழங்க வேண்டும்.
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மய்யம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைவருக்கும் விலையின்றி கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.