குமாரபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி வழங்க வேண்டும், பயணப்படி இரண்டாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, காலதாமதம் இல்லாமல் பணி வரன்முறை படுத்த வேண்டும், நிர்வாக காரணங்களால் கால தாமதமாக நில அளவை மற்றும் நிர்வாக பயிற்சி வழங்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் பணி வரன்முறை படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.