கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை

பவானியில் கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-27 15:00 GMT

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர் பாஸ்கரன்.

பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம் விநாயகா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன், குறிச்சி பெரியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சித்ரா என்கிற மனைவி உள்ளார்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியை. பாஸ்கரன் தனது குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடன், வட்டி அதிகரித்த நிலையில் தொகையினை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இன்று அதிகாலை  விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் மற்றும் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இன்று மாலை 5 மணி அளவில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News