பள்ளிபாளையத்தில் சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஏழை தொழிலாளர்களை தற்கொலைக்கு தூண்டும் நிதி நிறுவங்களை கண்டித்து பள்ளிபாளையம் சி.பி.எம். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் கந்து வட்டி கும்பலால் நிர்பந்தப்படுத்தப்பட்டு கடன்பெற்றவர்கள்தொடர்ந்து தற்கொலைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக தொடர் தற்கொலை நடைபெறுகிறது. மேலும் வெடியரசம் பாளையம் பகுதியை சார்ந்த சகோதரி சம்பூர்ணம், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் உள்ளூர் கந்து வட்டி போன்றவர்கள் செய்த நிர்பந்தால் எலி மருந்து சாப்பிட்டு சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இவரை தற்கொலைக்கு தூண்டிய நபர்களை பள்ளிபாளையம் காவல் துறை கைது செய்யக்கோரி சி.பி.எம். சார்பில் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு செயலர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.