பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பூங்கா மூடல்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பூங்கா மூடப்பட்டது.
ஓடப்பள்ளி தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த பூங்கா மூடப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி தடுப்பணை பகுதியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு அங்கு குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கல், தூரி போன்றவை அமைக்கப்பட்டன.
இந்த விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள், சிறுவர்கள் மகிழ்ச்சியோடு விளையாடி வந்தனர். இதனால் தினமும் ஏராளமானோர் இந்த பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் கூட்டம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக ஓடப்பள்ளி பூங்கா மூடப்பட்டது.
தினமும் இந்த பூங்காவுக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.