குமாரபாளையம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
குமாரபாளையத்தில் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் நகரமன்ற அவசர கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தனர்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): எங்கள் வார்டில் குப்பைகள் அள்ளுவது கிடையாது. பொதுமக்களுக்கு தினமும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கு பதில் சொல்லிவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என்றார்.
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்: அனைத்து வார்டுகளிலும் பணிகள் செய்து வருகிறார்கள். விரைவில் குறை இல்லாத அளவிற்கு பணிகள் செய்து தருவார்கள் என பதிலளித்தார்.
பழனிசாமி (அ.தி.மு.க.) : சாலை அகலப்படுத்தும் போது மின் கம்பங்கள் சாலை நடுவில் உள்ளது. அதை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.
புருஷோத்தமன், ராஜ், வேல்முருகன் , நாகநந்தினி, ரேவதி, செல்வி, ஆகிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வடிகால், குடிநீர் குழாய், குப்பை எடுத்தல் பணிகள் செய்து தர கோரிக்கை விடுத்தனர்.
ஜேம்ஸ் : (தி.மு.க.): எங்கள் ஆட்சியில் நிறைய மக்கள் நலப்பணிகள் செய்து கொடுத்து உள்ளோம் என்றார்.
பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) : எங்கள் கட்சி, உங்கள் கட்சி என்பது வேண்டாம். நான் பட்டியல் இட வேண்டியது ஆகும். கூட்டம் அமைதியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் : எந்த கட்சி பற்றியும் இங்கு பேச வேண்டாம். மக்கள் நலன் மட்டும் பேசுங்கள் எனப் பேசினார்.
பொறியாளர் ராஜேந்திரன்: அரசிடம் இருந்து வர வேண்டிய பணம் உள்ளது.வந்ததும் அனைத்து வார்டுகளில் தேவையான பணிகள் செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.
கதிரவன் (தி.மு.க.): கொம்பு பள்ளத்தில் சிமெண்ட் தரை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தன.