அரசு உதவி பெறும் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கவுன்சிலர்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் சுயேட்சை கவுன்சிலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.;
அரசு உதவி பெறும் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை குமாரபாளையம் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். சுயேட்சை கவுன்சிலர் கனகலட்சுமி கதிரேசன் பங்கேற்று நோட்டு புத்தகங்கள், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் விடியல் பிரகாஷ், தீபா ஸ்வீட் மணி, பிரீத்தி, தேவிகா, பாலமுருகன், லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The councilor