குமாரபாளையத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

நேற்று முதல் குமாரபாளையத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.;

Update: 2021-04-21 10:57 GMT

இரவுநேர ஊரடங்கு (மாதிரி படம் )

குமாரபாளையத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால்,வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் முன்னதாகவே நிறுத்தப்பட்டன. குமாரபாளையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

நகர பஸ்கள் மட்டும் இரவு 9.00 மணி வரை இயக்கப்பட்டன. குமாரபாளையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற டவுன் பஸ்கள் அந்தந்த ஊர்களில் நிறுத்திக் கொள்ளப்பட்டன. இரவு 10 மணிக்கு பின்னர் பஸ்களை இயக்க கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் அவர்களும் அதன்பின்னர் பஸ்களை இயக்கவில்லை. இரவு நேர ஊரடங்கை மீறி யாரும் சுற்றி திரிகிறார்களா என்று ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News