குமாரபாளையத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
குமாரபாளையத்தில் இன்று கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, குமாரபாளையம் பகுதியில் இன்று புதியதாக யாருக்கும் தொற்று கண்டறியபப்டவில்லை. அதே நேரத்தில், 3பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறுகையில், குமாரபாளையத்தில், யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இப்பகுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 640. நோயில் இருந்து குணமாகி, வீட்டிற்கு சென்றவர்கள் 613. குமாரபாளையம் பகுதியில் இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 3 பேர் மட்டுமே உள்ளதாக கூறினார்.