குமாரபாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
குறிப்பிட்ட நேரத்திற்குள் வியாபார நிறுவனத்தினர் கடைகளை அடைக்க வேண்டும், மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
குமாரபாளையத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது .
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் மருந்து, பால், ஓட்டல் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டது. நேற்று மாலை 5:00 மணியளவில் குமாரபாளையம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி பங்கேற்று பேசியதாவது:குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தார்கள் தங்கள் கடைகளை அடைக்க வேண்டும் எனவும், இதனை மீறுவோர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
போலீஸ் ஸ்டேஷன் பகுதி, பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு,ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இவர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.