குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் காவலர் நினைவு நாள் ஓவியம், கட்டுரை போட்டிகள்
Memorial Day -குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் காவலர் நினைவு நாள் ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
Memorial Day -குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் காவலர் நினைவு நாள் ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.
குமாரபாளையத்தில் பணியின் போது இறந்த போலீசார் சார்பில் காவலர் நினைவு நாளையொட்டி குமாரபாளையம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த படைப்புகள் யாவும் எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளுக்கு எஸ்.பி. அவர்களால் பரிசு வழங்கப்படவுள்ளதாக போலீசார் கூறினர். இந்த போட்டிகளை இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடத்தினர்.
குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க போலீசார் உயர் கோபுரம் அமைத்தனர்.
அக். 24 தீபாவளியையொட்டி குமாரபாளையம் நகரில் துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் தங்கள் கைவரிசையை காட்டுவது வழக்கம். அதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை சமாளித்து போக்குவரத்து சீர் செய்யவும் போலீசாரால் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இந்த உயர்கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அறவே இருக்க கூடாது, போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை அறிவித்து, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் அமல் படுத்த தமிழக அரசு அறிவித்தது. அதன்படி குமாரபாளையம் பகுதியில் அரசு பள்ளிகளில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய எஸ்.ஐ. மலர்விழி, போதை பொருட்கள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் பாதுகாக்கப்படும். சட்டம், ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. குப்பாண்டபாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆனங்கூர் பிரிவில் நிறைவு பெற்றது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தவாறும், கோஷங்கள் போட்டவாறும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர். இதில் இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில்,
தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் குறித்து பேசி, அதனை தடுக்கும் வழிமுறைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், போக்சோ குறித்த சட்ட திட்டங்கள், அதனை புகார் வழங்கும் முறை, தண்டனை விபரங்கள் குறித்து பேசினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2