குமாரபாளையத்தில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் மாநில செயலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

Update: 2021-08-01 15:15 GMT

குமாரபாளையத்தில் நடந்த கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் மாநில செயலர் பிரபாகரன் பேசினார்

குமாரபாளையத்தில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது பற்றி மாநில செயலர் பிரபாகரன் கூறியதாவது:

ஏழை நெசவாளர்கள், விவசாயிகள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்ற கடனுக்காக சங்கங்களின் செயலர்கள், ஜப்தி, ஏலம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் முன்னணி அரசியல் கட்சியினர் வீட்டுவசதி சங்க கடன்கள் ரத்து செய்யப்படும் என மாறி, மாறி வாக்குறுதி கொடுத்தனர்.

இப்போது ஆட்சிக்கு வந்ததும், இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டி, அபராத வட்டி, கூட்டு வட்டி என 10 லட்சம் முதல், 15 லட்சம் ஆகும் என கணக்கு காட்டி வருகிறார்கள். வாங்கிய கடனில் அசல் தொகையை நீண்ட கால தவணையாக செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இது பற்றி தமிழக முதல்வர், வீட்டு வசதி துறை அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். அதிகாரிகளின் போக்கை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட செயலர் லோகநாதன், சேலம் மாவட்ட செயலர் வேணுகோபால், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் உஷாராணி, நெசவாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News