குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம்

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2023-03-25 13:30 GMT

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற குடிமை பயிற்சி முகாமில் மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியில் 26 ஆண்டுகள் நூலகராக இருந்து ஓய்வு பெற்ற மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த முகாமில் பேசிய மணிவண்ணன், உடல் உழைப்பு சார்ந்த பணிகள் இழிவானதாக கருத தக்கது அல்ல. நம்மையும், நம் சுற்றுச் சூழலையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். நம்மை சார்ந்த சமூகத்திற்கு நாம் எப்போதும் உதவி செய்து வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தை தூய்மை படுத்தினர். இதில் பேராசிரியர்கள் அருணாசலம், வைரமணி, தீபா, சுமதி, தங்கவேல், சரளா, மேபல், ஹெலன், மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News