குமாரபாளையத்தில் வர்த்தக விளம்பர ஒளிபரப்பை துவக்கிய சேர்மன்
Namakkal News in Tamil -குமாரபாளையத்தில் வர்த்தக விளம்பர ஒளிபரப்பை சேர்மன் துவக்கி வைத்தார்.;
குமாரபாளையத்தில் வர்த்தக விளம்பர ஒளிபரப்பை சேர்மன் துவக்கி வைத்தார்.
Namakkal News in Tamil -நாமக்கல் மாவ்டடம், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் வர்த்தக விளம்பரம் சம்பந்தமாக ஆடியோ விளம்பரம் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்தது. தற்போது பழைய நபரால் அதனை செய்ய முடியாததால் சில ஆண்டுகள் அதற்கான ஒப்பந்ததாரர் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல பஸ் ஸ்டாண்ட்களில் வீடியோ விளம்பரங்கள் பொதுமக்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருவதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன் ஒலிபரப்பு துவக்க விழா பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, வர்த்தக விளம்பர ஒளிபரப்பை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன், மகாலிங்கம், மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2