மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம்
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.;
குமாரபாளையம் மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. குமாரபாளை யத்தில் மத்திய லயன்ஸ் சங்கத்தார், மத்திய இளம் லயன்ஸ் சங்கம், தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் சங்க தலைவர் ராஜண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் 77 பேர் ஐ.ஓ.எல். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 65 பேர் ரத்ததானம் வழங்கினர். கண்ணில் புரை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி ஆகியவைகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் வேலுமணி, கொமாரசாமி, ராஜேந்திரன், மனோகரன், பொன்னுசாமி, பழனிசாமி, சுரேஷ், சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். மாத்திரைகள், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ரத்ததான முகாமில் 92 பேர் ரத்ததானம் செய்தனர். ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள், சங்க தலைவர் மாதேஸ்வரன், கோகுல்நாத், சுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.