மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ.கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரியுள்ள நிதியினை ஒன்றிய அரசு முழுமையாக உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது.
பள்ளிபாளையம் பிரிவில் நடந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் ஈஸ்வரன், அர்த்தநாரி, விஜய்ஆனந்தன், கார்த்திகேயன், கிருஷ்ணசாமி, மணிவேலன், மனோகரன் சரசு, அம்சவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.
சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்களுக்கு 75% சதவீத கூலி உயர்வு வழங்க கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமான பல கட்ட பேச்சுவார்த்தை இதுவரை தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் 75% சதவீத கூலி உயர்வு பெற்றுத்தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் அசோகன், அர்த்தனாரி, அன்புமணி, மணிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.