கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண்மேடு அமைத்து கால்நடை வளர்ப்பு: பொதுமக்கள் புகார்

குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி கால்நடைகள் வளர்த்து வருகிறார்கள்;

Update: 2023-03-20 15:30 GMT

குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் மேடை அமைத்து வளர்க்கப்படும் கால்நடை 

குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி கால்நடைகளை வளர்த்து வருவதை டதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்,

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் எதிரில் கழிவுநீர் பள்ளத்தில் மாடுகள், கன்று குட்டிகள் கட்டி வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இதன் அருகில் மாட்டிறைச்சி கடையும் உள்ளது. மாடுகள் கட்டி வைக்கப்பட்ட இடம் மண் கொட்டப்பட்டு மேடாக ஆக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இதன் மறுபக்கம் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளத்தில் பொக்லைன் மூலம் பல நாட்களாக குப்பைகள், மண் குவியல், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் அதிக குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கசாப்பு கடை அருகே பல வியாபார நிறுவனங்கள் உள்ளன. மாரியம்மன் கோயிலும் உள்ளது. நகர் முழுதும் குடிநீர் விநியோகம் செய்யும் வாட்டர் டேங்க் இதனருகில்தான் உள்ளது. மண் குவியலால் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பல நோய்கள் பரவ காரணமாகின்றன.

மாடுகள் இறைச்சிக்காக  கொல்லப்படும் போது ஏற்படும் மாடுகளின் மரண ஓலம்  அப்பகுதியில் உள்ள  குழந்தைகளுக்கு அச்சத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது. பலருக்கும்  இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்வு அதிருப்தியையே கொடுத்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மாட்டிறைச்சி வியாபாரம் அதிகம் நடைபெறும். அப்போது இதன் கழிவுகளும் அதிகம் சேரும். கொட்டப்படும் கழிவுகளாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கால்நடைகளையும், கொட்டப்பட்ட மண் குவியலை யும் அகற்றி கழிவுநீர் எளிதில் செல்லும்படி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News