காசநோயாளிகளுக்கு எப்.-75 ஊட்டச்சத்து உணவு வழங்கும் முகாம்
குமாரபாளையத்தில் காசநோயாளிகளுக்கு எப்.-75 ஊட்டச்சத்து உணவு வழங்கும் முகாம் நடந்தது;
குமாரபாளையத்தில் காசநோயாளிகளுக்கு எப்.-75 ஊட்டச்சத்து உணவு வழங்கும் முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் காசநோயாளிகளுக்கு எப்.-75 ஊட்டச்சத்து உணவு வழங்கும் முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்.75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடந்தது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமாரபாளையம் காளியம்மன் கோவில் முன்பு, காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா? என பொதுமக்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் 75 நபர்களுக்கு மார்பு எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் நாமக்கல் மாவட்ட காசநோய் துறை துணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் டாக்டர் ரம்யா பங்கேற்று, பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினர். முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார ஆய்வாளர் பிரவீன் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களும் கலந்து கொண்டு காசநோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.