குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை மாநாடு
குமாரபாளையம் வடக்கு ஒன்றியம், தட்டான்குட்டை ஊராட்சி, அருவங்காடு, செங்காடு பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை மாநாடு நடந்தது.
குமாரபாளையம் வடக்கு ஒன்றியம், தட்டான்குட்டை ஊராட்சி, அருவங்காடு, செங்காடு பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை மாநாடு தங்கராசு தலைமையில் நடந்தது. மாவட்ட செயலர் பெருமாள், ஒன்றிய செயலர் தனேந்திரன் பங்கேற்றனர்.
இந்த பகுதிக்கு தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் தங்கவேல், செயலர் தங்கராசு, துணை செயலர் அசோகன், பொருளர் மாணிக்கராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அருவங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப பூங்காவில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற வேண்டும். அருவங்காடு பகுதியை மையப்படுத்தி ரேசன் கடை அமைக்க வேண்டும். சேலம் கோவை புறவழிச்சாலையில் முதலைப்பாளியூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.