குமாரபாளையத்தில் பா.ஜ.க. சக்தி கேந்திரா ஆய்வுக்கூட்டம்

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திரா ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-12-31 01:11 GMT

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற சக்தி கேந்திரா ஆய்வுக்கூட்டத்தில் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசினார்.

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் சக்தி கேந்திராஆய்வுக்கூட்டம் மாநில துணை தலைவர், பெருங்கோட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைத்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிக்கு பாடுபடுதல், உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசுகையில், கட்சியின் வெற்றிக்கு உண்மையுடன் பாடுபட வேண்டும். பூத் கமிட்டியில் போதுமான நபர்களை நியமிக்காத நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவார்கள். அர்பணிப்புடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம் என பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் சரவணராஜன், சிறப்பு அழைப்பாளர்கள் வக்கீல் தங்கவேல், ரமேஷ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆனங்கூர் பிரிவு சாலையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News